பெண் உடலை அடையாளம் கண்டறிய மரபணு சோதனை நடத்த நாகர்கோவில் ரெயில்வே காவல்துறை முடிவு

மோதிரத்தின் அடிப்படையில் மட்டுமே கொலை செய்யப்பட்ட பெண் அவர்தான் என்பதை உறுதி செய்ய முடியாது.
பெண் உடலை அடையாளம் கண்டறிய மரபணு சோதனை நடத்த நாகர்கோவில் ரெயில்வே காவல்துறை முடிவு
Published on: 

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில், பெண் ஒருவர் பிண மாக கிடந்தது கடந்த 18-ந்தேதி தெரியவந்தது. அந்த பெண் யார்? எப்படி இறந்தார்? என்று நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுவரும் நிலையில். பெண்ணில் உடலை அடையாளம் காண மரபணு சோதனை நடத்த நாகர்கோவில் ரெயில்வே காவல்துறை முடிவு செய்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில், பெண் ஒருவர் சடலமாக கிடந்தது கடந்த 18-ந்தேதி தெரியவந்தது. அந்த பெண் யார்? எப்படி இறந்தார்? என்று நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

அந்த பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருந்த தால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் யார்? என்று தெரியாத அளவுக்கு முகம் உருக்குலைந்து இருந்தது. ஆகவே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

பிரேத பரிசோதனையில் உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், செண்பகராமன்புதூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நாகர் கோவில் சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார்?

கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டறிய நாகர்கோவில் சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின்சுஜாதா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக் கப்பட்டிருந்தன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் கிடந்த தங்க மோதிரத்தை வைத்து அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர்? உள்ளிட்ட விஷயங்களை துப்புதுலக்கும் முயற்சியில் தனிப்டை போலீசார் ஈடுபட்டனர்.

மோதிரத்தில் இருந்த ‘ஹால்மார்க்’ முத்திரை மூலம் கொலை செய்யப்பட்டவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட் டது.

இதையடுத்து, மராட்டி யம் உள்ளிட்ட பல வடமாநி லங்களில் மாயமானவர்களின் பட்டியலை பெற்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டனர்.

அதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாயமாகி இருந்ததும், அவர் என்ன ஆனார்? என்று அவருடைய குடும்பத்தினர் தேடி வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து அவரது குடும்பத்தி னர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.கொல்லப்பட்ட பெண் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதை அடை யாளம் காணுவதற்காக மாயமான பெண்ணின் சகோதரர் உட்பட2 பேர் நாகர்கோவி லுக்கு வரவழைக்கப்பட்டனர்.

மராட்டிய மாநிலத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை அவர்களிடம் போலீசாரிடம் காண்பித்தனர். ஆனால் அந்த பெண்ணின் முகம் அழுகி இருந்ததால், அவர்களால் சரியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை.

இதை யடுத்து பெண்ணின் கையில் இருந்து கைப்பற்றப்பட்ட மோதிரத்தையும் போலீசார் காண்பித்தனர். அதனை பார்த்த மாயமான பெண்ணின் அவரது சகோதரர், அது தனது சகோதரி தான் என்று அடையாளம் காட்டினார்.

இருப்பினும் மோதிரத்தின் அடிப்படையில் மட்டுமே கொலை செய்யப்பட்ட பெண் அவர்தான் என்பதை உறுதி செய்ய முடியாது என்பதால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மரபணு சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்தனர்.​

இதற்காக கொலை செய்யப் பட்ட பெண்ணின் பெற்றோரை நாகர்கோவிலுக்கு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்த னர். ஆனால் மராட்டிய மாநில பெண்ணின் பெற்றோர் வயது முதிர்வு காரணமாக பயணம் செய்து வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மராட்டியத்தில் இருந்து வந்த பெண்ணின் சகோதரர் இன்று ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவம னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அவர் பார்த்தார். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கொலை செய்யப்பட்ட பெண் தனது சகோதரி தான் என்பதை முகத்தை பார்த்து அவரால் உறுதியாக கூற முடியவில்லை.

இருப்பி னும் பெண்ணின் உடலை பார்த்து அவர் கண் கலங்கினார்.பெற்றோருக்கு வயதாகி விட்டதால், சகோதரரின் ரத்த மாதிரிகளை கொண்டு மரபணு சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மரபணு சோதனை நடத்த முடிவு

சகோதரரின் மாதிரிகளையும், கொலை செய்யப் பட்ட பெண்ணின் உடல் மாதிரிகளையும் மரபணு பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரபணு சோதனை முடிவு கள் வந்த பிறகே கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

X