

நாகர்கோவிலில் ரயிலில் பெண் பாலியம் வன்கொடுமை கொலை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம், தமிழக அரசு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து வளாகங்களில் பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்ககூடாது என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கில் ஒருவர் கைதான நிலையில் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் கடிதம் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாகா்கோவில், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 18-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயிலை தூய்மை செய்யும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டபோது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியிருந்தது
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலத்தை கூறாய்வு செய்ததில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா். ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படையினா் நாகா்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா்.
அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் 5-ஆவது நடைமேடையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத பெண்ணை ஆள்நடமாட்டமற்ற மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமாகத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஐயப்பனை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.இந்த நிலையில் இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர ஆணையம் உத்ரவிட்டுள்ளது.