அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான மேற்காசிய போர் பதற்றத்தால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது நாடு முழுவதும் பல்வேறு வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகளில் உற்பத்தியை பாதிக்க செய்திருப்பதுடன், விலைவாசியையும் உயர்த்தி உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என பரவும் தகவல் குறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. விநியோகம் பாதிக்கப்படவில்லை.
தடையற்ற பெட்ரோல், டீசல் விற்பனைக்கு உறுதி பூண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என பரவும் தகவல் முற்றிலும் வதந்தி, ஆதாரமற்ற தகவல் என்று தெரிவித்துள்ளது.