தமிழக செய்திகள்

தொழில் முதலீடு விவகாரம்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப தயாரா? - திமுகவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்

எந்த நேரத்தில் தொழில் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது என்பதற்கு ஆதாரம் உள்ளது.

தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்று விட்டதாக எழுந்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொழில்முறை அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* இந்த கேள்வியை சட்டப்பேரவையில் எழுப்பத் தயாரா? நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

* எந்த நேரத்தில் தொழில் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* சட்டப்பேரவையில் யாராவது இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தகுந்த பதிலை கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.