கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு 2,415 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது, கே.ஆர்.பி. அணை அதன் முழு கொள்ளளவான 52 அடியை எட்டி நிரம்பியுள்ளது.இதனால் அணைக்கு வினாடிக்கு 1,859 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் இறங்கி துணி துவைக்கவோ அல்லது செல்ஃபி எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது.கே.ஆர்.பி. அணை பூங்கா மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.