தமிழக செய்திகள்

பாமக, அமமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி? அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மாலை மலர்

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று அதிமுகவின் முழு தேர்தல் அறிக்கை வெளியானது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை இன்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதில் பெரும்பாலும் பாமகவிற்கு எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ, அதாவது வடமாவட்டங்கள், வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகள்;

சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போரூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம் காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாமக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்முக போட்டியிடும் 11 தொகுதிகள்;

பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.