அறநிலையத்துறைக்கு பார்ப்பனர் அமைச்சர் என்ற விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதில் அளித்துள்ளார்.
திருச்சியில் இதுகுறித்து செய்சாதியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:-
சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான்.
சாதி பார்த்து யாருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் தவெக சார்பில் 30 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், ஸ்ரீரங்கத்தில் நின்று வெற்றிபெற்ற அமைச்சர் ரமேஷ்க்கு அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது பேசும்பொருளாகியுள்ளது.
பார்ப்பரான அமைச்சர் ரமேஷ்க்கு அறநிலையத்துறையா என விமர்சனங்கள் எழுந்தது.
இதுதொடர்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர்,"சமூகநீதி, மதச்சார்பற்ற அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார்.
சமூகநீதி, மதச்சார்பற்ற அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார்.
* சாதிய அரசியல், மத அரசியல், பண அரசியல் என அனைத்தையும் தூக்கி எறிந்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
* சாதி, குடும்ப பின்புலம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து இளைஞர் அமைச்சரவை உருவாக்கம்.
* கட்சிக்கு உறுதியாக உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
* த.வெ.க. வெற்றிபெற கடுமையாக உழைத்தவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
* அமைச்சராக நியமிக்கும் வரை ரமேஷின் சாதி எங்களுக்கு தெரியாது" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.