சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நடந்து முடிந்த தேர்தலில் பணபலம் தூக்கி எறியப்பட்டுள்ளது.
* சமூகநீதி, மதச்சார்பற்ற அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார்.
* சாதிய அரசியல், மத அரசியல், பண அரசியல் என அனைத்தையும் தூக்கி எறிந்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
* சாதி, குடும்ப பின்புலம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து இளைஞர் அமைச்சரவை உருவாக்கம்.
* இந்தியாவே பார்த்து பிரமிக்கும் வகையில் ஒரு இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார்.
* ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
* கட்சிக்கு உறுதியாக உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
* அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார்.
* 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.
* அதிகாரம் ஒருவரிடம் மட்டும்தான் இருக்க வேண்டுமா? என முதன்முதலில் கூறியவர் திருமாவளவன்.
* அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்த நாள்தான் உண்மையான சமூக நீதி நாள் என முதலமைச்சர் விஜய் கூறினார்.
* விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் விஜய் நெகிழ்ந்து போனார்.
* த.வெ.க. வெற்றி பெறவே பெறாது என்றார்கள், கடுமையாக உழைத்ததால் வெற்றி சாத்தியமாகி உள்ளது.
* த.வெ.க. வெற்றிபெற கடுமையாக உழைத்தவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
* அமைச்சராக நியமிக்கும் வரை ரமேஷின் சாதி எங்களுக்கு தெரியாது.
* பெரியார், அண்ணா, அம்பேத்கர் கொள்கைகள் வழியில் தான் த.வெ.க. அரசு செல்லும்.
* பின்தங்கிய நிலையில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவரை முன்னேற்றும் பணியில் அமைச்சர் ஷாஜகான் சிறப்பாக செயல்படுவார்.
* தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிக்கவில்லை.
* விசிகவின் வன்னிஅரசு அமைச்சராக பொறுப்பேற்றதை ஒவ்வொரு விசிகவினரும் கொண்டாடி வருகின்றனர்.
* சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆ.ராசா விமர்சித்துள்ளார். ஆ.ராசாவின் நோக்கமே கடுமையாக கண்டிக்கத்தக்கது.
* தோற்றதற்கான காரணத்தை தேடுகிறது திமுக, இதுவரை அவர்களுக்கு காரணம் தெரியவில்லை என்கிறார்கள்.
* எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் ஏதோ ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வார்த்தைகளை தி.மு.க.வினர் பயன்படுத்துவர்.
* ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரு கட்சியின் தலைவரை தரம்தாழ்ந்து விமர்சிப்பதா? என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பினார்.