தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் இரு முறை விலை மாற்றம் காணப்பட்டது. இதனையடுத்து கடந்த 3-ந்தேதி கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. 4-ந்தேதி தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,700-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை குறைவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600

04-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600

03-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600

02-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,400

01-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-07-2026- ஒரு கிராம் ரூ.260

04-07-2026- ஒரு கிராம் ரூ.260

03-07-2026- ஒரு கிராம் ரூ.260

02-07-2026- ஒரு கிராம் ரூ.255

01-07-2026- ஒரு கிராம் ரூ.245