தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: தங்கம் விலை இன்றைய நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை தினமும் ஒரே நாளில் இரு முறை விலை மாற்றம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றும் விலை உயர்ந்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போல வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

03-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600

02-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,400

01-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000

30-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

29-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

02-07-2026- ஒரு கிராம் ரூ.260

02-07-2026- ஒரு கிராம் ரூ.255

01-07-2026- ஒரு கிராம் ரூ.245

30-06-2026- ஒரு கிராம் ரூ.245

29-06-2026- ஒரு கிராம் ரூ.245