தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. அப்படியாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலையில் பெருமளவில் இறக்கமே இருந்தது. அதன்படி, நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்து வந்ததை பார்க்க முடிகிறது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.

ஒரேநாளில் இருமுறை மாற்றம்

நேற்று முன்தினம் விலையை விட காலையில் கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்திருந்தது. இந்த நிலையில் மதியத்தில் எவ்வளவு வேகத்தில் குறைந்ததோ, அதே வேகத்தில் அதிகரித்தது. மதியம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது.

ஆக மொத்தம் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை குறைவு

இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து கிராம் 13,100 ரூபாய்க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

30-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

29-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

28-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

27-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

26-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

30-06-2026- ஒரு கிராம் ரூ.245

29-06-2026- ஒரு கிராம் ரூ.245

28-06-2026- ஒரு கிராம் ரூ.245

27-06-2026- ஒரு கிராம் ரூ.245

26-06-2026- ஒரு கிராம் ரூ.245