தமிழக செய்திகள்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒட்ட வைத்த கண்ணாடி - ஜி.கே.வாசன் #DMKCongress

வருகிற தேர்தலில் நிச்சயமாக மு.க.ஸ்டாலின் கணக்கு தப்பு கணக்காக அமையும்.வாக்கு அவர்களுக்கு இல்லை என்பதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.

சென்னையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வாக்குவங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வகையில் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் இவர்களை இனிமேல் ஒருபோதும் நம்ப தயாராக இல்லை.

வருகிற தேர்தலில் நிச்சயமாக மு.க.ஸ்டாலின் கணக்கு தப்பு கணக்காக அமையும்.

தி.மு.க.- காங்கிரஸ் என்பது உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைத்து இருக்கிறார்கள். ஒட்ட வைத்த கண்ணாடியால் முகம் பார்க்க முடியாது. அப்படி என்றால் அது வாக்களர்களுக்கு இனிமேல் பயன்தராது. வாக்காளர்களுக்கு அவர்கள் மீது இருக்கும் சந்தேகம் உச்சத்தில் இருக்கிறது.

வாக்கு அவர்களுக்கு இல்லை என்பதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள். அவர்கள் போட்ட நாடகம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT