தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலையிலேயே வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தனது வாக்கை பதிவு செய்தார்.