தேனாம்பேட்டையில் வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
தேனாம்பேட்டையில் வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலையிலேயே வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி, மகன், மருமகள், பேரனுடன் வாக்களிக்க வந்தார்.

வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். இதையடுத்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், பேரன், மருமகள், மகன் உதயநிதி ஸ்டாலின் அனைவரும் வாக்கை பதிவு செய்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com