தமிழக செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி, உதயநிதி புகழாரம்

காந்தியடிகளின் பிறந்த நாளில் சத்தியம் - நேர்மை - மத நல்லிணக்கம் - சகோதரத்துவம் காக்க உறுதியேற்போம்.

மகாத்மா காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காந்தி ஜெயந்தியையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அகிம்சை என்னும் ஒற்றை ஆயுதத்தால் உலக வல்லரசின் பேரரசை அசைத்துப் பார்த்த அறத்தின் திருவுருவம்!

சமத்துவம், எளிமை, சத்தியம் ஆகியவற்றைத் தன் வாழ்நாளெல்லாம் மூச்சாகக் கொண்டு, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுத்த மாமனிதர்!

உடையைத் துறந்து, எளிய வாழ்வை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், கிராமங்களின் உயிர்ப்பாய், இந்தியாவின் பெயரை உலகரங்கில் உயர்த்திய 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று,

தாய்த்திருநாட்டிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவைகளைப் போற்றி வணங்குவதோடு, மகாத்மா காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்தியாவின் அடையாளம் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று.

ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளுக்கும் - பீரங்கிகளுக்கும் முன்பு, அகிம்சை வழியில் போராடி சுதந்திர இந்தியாவுக்கான கதவுகளை திறந்து விட்டவர்.

காந்தியடிகளின் பிறந்த நாளில் சத்தியம் - நேர்மை - மத நல்லிணக்கம் - சகோதரத்துவம் காக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT