மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

பிரார்த்தனை, பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
PM Modi
Published on: 

மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் மரியாதை செலுத்தி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டில், மலர்களாக அலங்கரிக்கப்பட்டு இருந்த காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமரை தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி கவர்னர் தரன்ஜித் சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர். பின்னர், பிரார்த்தனை, பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் ஒளிவிளக்காக திகழ்கிறது.

இது ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து விளங்கும்.எல்லா உயிர்களிடமும் பகையற்றவராகவும், நட்புணர்வும் கருணையும் கொண்டவராகவும் இருப்பவர்; ‘எனது’ என்ற பற்றும் அகந்தையும் இல்லாதவர்; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர்; பொறுமை கொண்டவர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com