தமிழக செய்திகள்

ஜி.கே.வாசனைத் தொடர்ந்து தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஜான் பாண்டியன்!

மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு, முதலமைச்சர் விஜய் கொடுக்கும் பரிசு மௌளம்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

“தேசிய ஜனநாயக கூட்டணியில் வெகுகாலம் தொடர்ந்தோம். இன்று பொதுக் குழு கூட்டி ஆலோசித்து, அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு எடுத்துள்ளோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து அந்த சமயத்திலேயே முடிவெடுக்க முடியும்.

தமமுகவில் இருந்து யாரும் தவெகவில் இணையவில்லை. கொள்ளையடித்தவர்கள் அனைவரும் தவெகவில் சென்று இணைகின்றனர். ஒரு சொம்பு பாலுக்கு ஒரு துளி விஷம் போதும். முதலமைச்சர் விஷத்தோடு கலக்கவேண்டாம்.

முதலமைச்சர் விஜய் மௌன விரதத்தில் இருக்கிறார். அதனை களைக்கும்போது தமிழ்நாடு மக்கள் அவரை புரிந்துகொள்வார்கள். மாற்றம் வேண்டும் என அவரை தேர்ந்தெடுத்தார்கள். மக்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு மௌனம்தான். விரைவில் வாய்திறப்பார் என நம்புகிறோம்.” என தெரிவித்தார்.