சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் , காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் எழுந்த புகார்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில், ஏற்கனவே ஐ.பி.எஸ். அதிகாரிகளான அருண் மற்றும் கண்ணன் ஆகியோரும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது உதவி ஆணையர் யாஸ்மினும் அந்தப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற காவல் ஆய்வாளர்கள் மீதும் துறை சார்ந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் பட்டியலியனப் பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அப்போது சென்னையில் முக்கியப் பணிகளில் இருந்த காவல் அதிகாரிகள் ஒவ்வொருவர் மீதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.