திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து, அவருடைய 5 வயது மகனை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன்களுடன் பைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து இடித்து கீழே தள்ளிய மர்ம கும்பல் இருவரையும் வெட்டிக்கொலை செய்துள்ளது.
காளிமுத்துவின் தலையை வெட்டி கல்லிடைக்குறிச்சி, நெல்லை நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் வைத்துவிட்டு கும்பல் சென்றுள்ளது.
படுகாயமடைந்த காளிமுத்துவின் மூத்த மகன் சின்னராஜ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடைபெற்றிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.