விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே மூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாயின.
இன்று விடுமுறை தினம் என்பதால், பட்டாசு ஆலை மூடப்பட்டிருந்தது. அதனால், பட்டாசு ஆலை வளாகத்தில் யாரும் இல்லாதததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் சீனி என்பவருக்கு சொந்தமான ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.