தமிழக செய்திகள்

சென்னையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

நீண்ட காலமாக உகந்த தொழிலாளராக குறைந்த ஊதியம் பெற்று வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்சார வாரியம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், இடைத்தரகர்களை அகற்ற வேண்டும் என்று கோரி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அவர்களை கோட்டைக்கு விடாமல் எழும்பூர் லாங் கார்டன் சாலையில் ஒன்று கூட போலீசார் அனுமதித்தனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக உகந்த தொழிலாளராக குறைந்த ஊதியம் பெற்று வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்சார வாரியம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், இடைத்தரகர்களை அகற்ற வேண்டும் என்று கோரி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து அரசு ஒப்பந்த தொழிலாளர்களின் புள்ளி விவரங்கள் மற்றும் அவர்கள் வேலை பார்த்த விவரங்களை எழுத்துப் பூர்வமாக அதிகாரிகள் கேட்டனர். அதனை ஏற்று சுய விவரங்களை எழுதிக் கொடுத்து வருகின்றனர்.