தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவடி, பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 2, 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் பட்டாபிராம் இடையே 'டவுன் பாஸ்ட் லைனில்' இயக்கப்படும். இதனால் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.
இதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் பட்டாபிராம் இடையே 'டவுன் பாஸ்ட் லைனில்' இயக்கப்படும். இதனால் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும் ஆவடி மற்றும் பட்டாபிராம் இடையே 'டவுன் பாஸ்ட் லைனில்' இயக்கப்படும். இதனால் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது. அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரெயில் ஆவடி மற்றும் பட்டாபிராம் இடையே 'டவுன் பாஸ்ட் லைனில்' இயக்கப்படும். இதனால் இந்து கல்லூரி நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.