தமிழக செய்திகள்

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. தி.மு.க.-வினர் தயாராக இருக்க வேண்டும்..!- மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் வரை இந்த மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும்.

தவெக ஆட்சியில் ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள், ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள்.

மக்களை காக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. தவெக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கேடு மின்வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டை 2-ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்த்தினோம். தினம் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் திமுக அரசியல் செயல்பட்டது.

உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து தொழில் தொடங்கினர். எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் பெருகியது.

திமுக அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் வரை இந்த மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும்.

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை, ஆனால் தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்றார்கள்.

திமுக வெல்ல வேண்டும், ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில் வண்டி ஓடுகிறது.

வண்டி எப்போது நிற்கும் என தெரியாது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மாதத்திலோ, 6 மாதத்திலோ தேர்தல் வரலாம், திமுக தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.