ரெயில் 
தமிழக செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

வழக்கமாக எழும்பூர் வரை இயக்கப்படும் 5 முக்கிய ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களுடன் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளவும், அங்கிருந்தே மீண்டும் புறப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வழக்கமாக எழும்பூர் வரை இயக்கப்படும் 5 முக்கிய ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களுடன் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளவும், அங்கிருந்தே மீண்டும் புறப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் ரெயில்கள்

வழக்கமாக சென்னை எழும்பூர் வரை வந்து செல்லும் கீழ்க்கண்ட ரெயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்தே மறுமார்க்கமாக இயக்கப்படும்.

* தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16866) மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16160) கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20636) சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22154).

மாம்பலம் வரை இயக்கப்படும் ரெயில்

திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12654) தற்காலிகமாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, அங்கிருந்தே மீண்டும் திருச்சிக்குப் புறப்படும்.

பயணிகளுக்கு அறிவுறுத்தல்

மறுசீரமைப்பு பணிகள் முடியும் வரை பயணிகள் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குப் பதிலாக, தங்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்ப தாம்பரம் அல்லது மாம்பலம் ரெயில் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.