தமிழக செய்திகள்

கல்வி விருது வழங்கும் விழா: நீலாங்கரையில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் என தகவல்

மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையுடன் சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் விஜய் கெளரவிக்க உள்ளார்.

சென்னை நீலாங்கரையில் வரும் நவம்பர் 18 அன்று த.வெ.க.வின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களை பாராட்டும் வகையில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 30 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வரும் நவம்பர் 18 அன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையுடன் சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் விஜய் கெளரவிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT