தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலம் ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
தவெகவுக்கு பம்பர் பரிசு அடித்ததை போன்று ஆட்சிக்கு வந்துவிட்டனர். இவர்களுக்கு ஆட்சி எவ்வாறு நடத்த வேண்டும் என்றே தெரியவில்லை.
இந்த தவெக அரசாங்கத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் ஆற்றல் இல்லாமல் உள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; அந்த விஷயத்தை சரியா அல்லது தவறா என்று நாம் கூற முடியாது.
தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது; தமிழகத்தின் பல பகுதிகளில் சிறுமிகள் காணாமல் போயிருக்கின்றனர்.
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் தமிழக முதலமைச்சர் இன்றுவரை பதில் எதுவும் கூறவில்லை.
தமிழக முதலமைச்சரின் கையில் தான் காவல்துறையின் கட்டுப்பாடு உள்ளது. இன்றைக்கு தமிழகத்திலேயே போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்யும் சூழல் நிலவுகிறது.
இன்றைக்கு மாதவரத்தில் 70 கிலோ போதைப்பொருளை மத்திய புலனாய்வு வருவாய் அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனைத்து குற்றங்களும் போதைப்பொருள் புழக்கத்தால் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தவெக சட்டமன்ற உறுப்பினரே, ஒரு மாவட்ட ஆட்சி தலைவருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார் என்றால், இந்த அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.