சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் அ.தி.மு.க. நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் டி.டி.வி.தினகரன் அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்டவர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப்பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின் அவர்களே... என்று கூறியுள்ளார்.