பாலக்கோட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாலக்கோட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருடன் சென்று முதலமைச்சர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com