அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* செங்கோட்டையன் திமுகவின் உளவாளி.
* அதிமுகவில் இருந்தபோதே உளவாளியாக இருந்தவர் செங்கோட்டையன். சட்டசபையில் திமுகவை எதிர்த்து பேசாதவர்.
* ஜெயலலிதாவை இழந்த பிறகு தாயில்லாத பிள்ளையாக தவித்தபோது அதிமுகவை உடைக்க முயன்றவர்களுக்கு துணை போனவர் செங்கோட்டையன்.
* அதிமுகவில் யாரையும் வளர விடாதவர் செங்கோட்டையன், சிறுமையாக பேச ஆரம்பித்து செல்வாக்கை இழந்து விட்டார்.
* செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் யாரையும் வளர விட மாட்டார். அவரால் முத்துசாமி போன்றோர் கட்சியை விட்டு சென்றனர்.
* மக்களை அடிமைகளாக பார்க்கிறார் செங்கோட்டையன்.
* திமிர் பிடித்த, பொறாமை குணம் கொண்டவரான செங்கோட்டையன் நாட்டிற்கு தேவையா?
* மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுக்க மாநில அரசு நிதியில் மேற்கொண்டோம்.
* சேலம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.