தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி 
தமிழக செய்திகள்

தி.மு.க.வினரின் அமளி, தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பதிலளித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் செய்து அமளியில் ஈடுபட்டனர். இதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT