வெற்றி வான் மகள் திட்டம்  
தமிழக செய்திகள்

மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள்.. வெற்றி வான் மகள் திட்டம் அறிவிப்பு

கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெற்றி வான் மகள் திட்டம்

அதில் குறிப்பாக பெண்களை டிரோன்களை இயக்குபவர்களாக மாற்றுவதற்கு ‘வெற்றி வான் மகள் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியில் வான்மகள் திட்டம் தொடங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.50 கோடியில் டிரோன்கள் வழங்கப்படும்.

ரூ.4 கோடியில் டிரோன் இயக்க பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.