

தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார்.
விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், தோட்டக்கலை மற்றும் பயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிதி ஒதுக்கீடுகள்:
சாமந்தி மலர் சாகுபடியை ஊக்குவிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் LED விளக்குகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரைக் குடிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வாழை மரங்கள் சேதமடைவதைத் தடுக்க, வாழைக் கன்றுகளுக்கு முட்டுக்கொடுக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.