ரெயில் தண்டவாளங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள் என்று தென்னக ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரெயில் பாதைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பது மிகவும் ஆபத்தானது. பட்டாசுகளிலிருந்து சிதறும் தீப்பொறிகளால் அந்த வழியே கடந்து செல்லும் ரயில்களில் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. மேலும், அதிலிருந்து வரும் புகை ரயில் ஓட்டுநர்களின் (லோகோ பைலட்டுகளின்) பார்வையை மறைத்து, பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். ரயில்வே பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுங்கள்.
பாதுகாப்பான மற்றும் திறந்தவெளிகளில் மட்டுமே தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
தண்டவாளங்களுக்கு அருகில் வெடிக்கும் பட்டாசுகளின் தீப்பொறி கடந்து செல்லும் ரயில்களில் எளிதாக தீவிபத்தை ஏற்படுத்தலாம்.
பட்டாசுப் புகையானது ரயில் ஓட்டுநர்களின் (Loco Pilots) பார்வையை மறைத்து பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
ரெயில்வே பகுதிகளிலிருந்து தள்ளி, பாதுகாப்பான திறந்தவெளிகளில் மட்டுமே உங்கள் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
என்று அறிவுறுத்தியுள்ளது.