தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிலையில், திமுகவின் முப்பெரும் விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு எனும் மாபெரும் முன்னெடுப்பை எடுத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்று முழங்கியுள்ளார். மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று நம்மை ஒடுக்க முயற்சிக்கும் ஆதிக்க சக்திகளை… pic.twitter.com/ug7O9Pl3qN