மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய், அங்கு தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பேசத் தவறியது ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் காவிரி மேகதாது அணை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து மவுனம் காப்பது ஏன் என்று திமுக தரப்பில் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய், அங்கு தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பேசத் தவறியது ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்தபோதும், மேகதாது அணை கட்டுமானப் பணிகள் குறித்து விவாதிக்காதது தமிழகத்திற்குச் செய்யும் துரோகம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவெக அரசின் இந்த மெத்தனப்போக்கும் அலட்சியமும் தொடர்ந்தால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக திமுக தரப்பு எச்சரித்துள்ளது. பொதுமக்களின் கவனத்தை மடைமாற்றவே டெல்லி சென்று புத்தக ஊழல் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார். தவெக அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது என திமுக குற்றம்சாட்டியுள்ளது.