திமுக எம்எல்ஏக்கள் 
தமிழக செய்திகள்

சபாநாயகர் முன் தர்ணா.. திமுக எம்எல்ஏ கையை பிடித்து தூக்கிவிட்ட முதலமைச்சர் விஜய்

திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சர் விஜய் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும் ஊழல், முறைகேடுகள் நடந்ததாகவும் பகரிங்கமாக குற்றம்சாட்டினார்.

விஜய் பேச்சு

"திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள். செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது

பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது.

திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.

ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்." என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசினார்.

திமுகவினர் அமளி

முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கினர்.

முதலமைச்சர் விஜய் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பேச அனுமதி வேண்டும் என்று திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

ஆனால் அவர்கள் உடனடியாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்ட்டார். இதனிடையே அவை முன்னவரான செங்கோட்டையன் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அனுமதி

இதைத்தொடர்ந்து திமுகவினரின் அமளி அதிகரித்தது. சபாநாயகர் இருக்கை முன்னே சென்று திமுகவினர் கூச்சலிடத் தொடங்கினர். சில திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எழுந்து, திமுகவினர் பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சபாநாயகர் திமுகவினருக்கு பேச அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் திமுகவினர் மீண்டும் கூச்சலிட்டதால் அனுமதி தரமாட்டேன் என திட்டவட்டமாக கூற, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே, தனது மேஜைக்கு அருகே சபாநாயகரை நோக்கி கீழே தரையில் அமர்ந்திருந்த மூத்த திமுக எம்எல்ஏ ஒருவர் எழுந்துகொள்ள அவரது கையை பிடித்து முதலமைச்சர் விஜய் உதவினார்.

SCROLL FOR NEXT