தமிழக செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் திமுக மனு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்று திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வேலு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,

* போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

* பொதுமக்களுக்கும் அந்த பகுதி மீனவ மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

* கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது.

* சுற்றுச்சூழல், கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் விவரம் அரசாணையில் இல்லை.

* பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.

* நிதி நெருக்கடியில் உள்ளதாக அறிவித்த அரசு ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம் அரசாணை பிறப்பித்தது தன்னிச்சையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்எல்ஏ வேலு ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT