தமிழகத்தில் குதிரை பேரத்தை நடத்துவது தவெக அரசு தான் என்று திமுக குற்றம்சாட்டி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆட்சி கவிழ்ப்பு சதி நடந்ததாக வெளியான புகார் தொடர்பாக திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது மைனாரிட்டி அரசு.
* விஜய் அரசு எப்போதும் வேண்டுமானாலும் கவிழும் நிலையில் தான் உள்ளது.
* தமிழகத்தில் குதிரை பேரத்தை நடத்துவது தவெக அரசு தான்.
* அமமுக சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரத்தின் மூலம் இழுக்க முயன்றது தவெக.
* குதிரை பேரம் தொடர்பாக டிடிவி தினகரன் அளித்த புகார் என்ன ஆனது?
* 25 சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.