தமிழக செய்திகள்

மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை கலைத்தது ஏற்புடையதல்ல - இடதுசாரிகள்

தீபாவளி பண்டிகைக் காலத்திலும் கூட, விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், நவம்பர் புரட்சி நாளில் மக்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் தலைவர் பெ. சண்முகம் பேசுகையில்

இன்று உலகம் முழுவதும் நவம்பர் புரட்சி (அக்டோபர் புரட்சி) கொண்டாடப்படுகிறது. நாங்களும் தமிழ்நாடு சிபிஐ(எம்) அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றி இதைக் கொண்டாடுகிறோம். சோவியத் புரட்சியே முதன்முதலில் வெற்றிபெற்ற புரட்சியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளிலும் புரட்சிகள் வெற்றிபெற்றன.

அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பும் அவரது கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன. ஈரான் போர் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக உணரப்படுகிறது. தீபாவளி பண்டிகைக் காலத்திலும் கூட, விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில், மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக சிபிஐ(எம்) உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக முந்தைய திமுக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை, தற்போதைய அரசு கலைத்துள்ளது. இந்த அரசு அக்குழுவைக் கலைத்திருக்கக் கூடாது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன என்று குறிப்பிட்டார்.

கோவை பெரியார் அறிவுலக நூல்கள் மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்நூல்களோடு குப்பைகளையும் சேர்த்து வைத்துள்ளது மிகப்பெரிய மோசடிவிஜய் என்ற பெயரில் பல எழுத்தாளர்கள் எப்படி முளைத்தார்கள் என்று தெரியவில்லை.

எந்த ஆட்சியில் இந்த முறைகேடு நடந்தாலும் யார் காரணமென கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்அறிவு மோசடி நடந்துள்ளது. இதை வெளிப்படுத்திய எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ தலைவர் மூ.வீரபாண்டியன் பேசுகையில்

இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பாக நவம்பர் [புரட்சி நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.சோவியத் நாட்டில் அந்த புரட்சி மறைந்திருக்கலாம் அல்லது தற்காலிக வீழ்ச்சியை பெற்றிருக்கலாம். ஆனால் அது தொடங்கி வைத்த திசை நீண்டுக்கொண்டே இருக்கிறது இந்தியா போன்ற மகத்தான தேசத்தின் விடுதலையை உந்தி சென்றது நவம்பர் புரட்சி நாள்

பெரியார் அறிவுலகம் என்பது கடந்த ஆட்சியின் சிறப்பான முயற்சி .உலகிலேயே சுமரியதைக்கான இயக்கத்தை தொடங்கியவர் பெரியார்.அவரின் பெயரில் நூல்கம் அமையபெற்றிப்பது சிறப்பு , அத்தகைய நூலகத்தில் முறைகேடு நடந்திருப்ப தாக சிறைந்த எழுத்தாளர்கள் கூறுகையில் அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சடடத்தி முன் நிறுத்தப்பட்டு தண்டிக்க வேனும் இது எங்களில் நிலைப்பாடு என்று தெரிவித்தார்,.

மேலும் செய்தியாளர்களின் விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்.

ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும். ஒன்றிய மாநில அரசுகள் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவதகாவும் எந்த வகையிலும் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

உய்ர் மட்ட குழிவை கலைத்திருப்பது ஏற்புடையதல்ல இந்திய ஒரு மொழி பேசுகின்ற ஒற்றை மொழி நாடு அல்ல பல்வேறு மொழி பேசுகிற தேசிய கூட்டிசைவு தான் இந்தியா . இதில் மாநிலங்கள் தான் அதிகாரத்தை தருகிறது

அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒன்றிய அரசு மாநில அரசுகள் மீது அதிகாரத்தை செலுத்துகிறது.கவர்னர் மூலம் இரட்டை ஆட்சிக்கு முயல்கிறத.இது இந்தியாவின் ஒன்றுமையை கேள்விக்குள்ளாகும் முன்னர் ஆட்சியில் அமைத்த அந்த குழு நல்லது இது ஆராய பட வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT