கடந்த திமுக் ஆட்சியில் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டு, அதன் அதிகார வரம்பு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைகப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டாலின்
தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் "State Rights Theatre Rights" என்று பதிவிட்டு, தவெக அரசு உயர்மட்டக் குழுவைக் கலைத்ததை விமர்சித்துள்ளார். மாநில உரிமைகளைவிடத் திரையரங்க உரிமைகளுக்கே புதிய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார்.
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்கும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இக்குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் முன்னாள் மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம். நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகப் பணியாற்றினர். இக்குழு, பெரிதும் பாராட்டப்பட்ட தனது அறிக்கையின் முதல் பகுதியை, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிப்ரவரி 16 அன்று சமர்ப்பித்தது.
இந்த நிலையில் தற்போது உள்ள அரசு தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தை மறுசீரமைத்துள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தல்,
சட்டங்களை மறு ஆய்வு செய்தல் , நிறுவன கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விரிவான் அதிகாரங்கள் அணையத்திடம் ஒப்படைக்கப்ப்பட்டுள்ளன