தமிழக செய்திகள்

2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் வலுப்பெற்றன - தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை கணிசமாக மழை பெய்து வருகிறது.

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படுகிறது.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளம் கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT