தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவில் தரிசன டிக்கெட் உயர்த்த முடிவு? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளது.

திருச்செந்தூர் தரிசன டிக்கெட் உயர்த்தப்படும் என வெளியான தகவல் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேவை அறிந்து மின்சாரத்துறைக்கு உடனடியாக 15,000 பேரை நியமிப்பதற்கான ஒப்புதலில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.

மின்சாரத்துறையில் 50 சதவீத காலிப்பணியிடம் உள்ள நிலையில் இந்த வருடத்தில் மட்டும் 15000 பேரை நியமிக்க உள்ளோம்.

ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விவகாரத்தில் மக்களிடம் கருத்து மட்டும் தான் கேட்கப்பட்டது, விலை உயர்த்தப்படவில்லை.

அதிகாரிகள் ஏற்கெனவே பரிசீலித்த நிலையில் கருத்து தான் கேட்டோம், விலை உயர்த்தவில்லை.

மக்கள் கூறுவதன்படி தான் அரசு செயல்படும், மக்கள் முடிவை தாண்டி தவெக அரசு எந்த முடிவும் எடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.