தமிழக செய்திகள்

அர்னாப் புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய இடங்களுக்கு மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் இன்று காலை ஆந்திர மாநிலம் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே கரையை கடந்தது.

பலத்த மழை மற்றும் காற்று வீசியதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய இடங்களுக்கு மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு இன்று அதிகாலை 5.25 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 7 மணிக்கு விஜயவாடா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.30 மணிக்கு, விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2.35 மணிக்கு ராஜ முந்திரி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, விஜயவாடா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 4 மணிக்கு, விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 6 புறப்பட்டு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.

இதைப்போல் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய 6 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களும், இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT