தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் அதிமுக மோசமாக தோல்வி அடைந்துள்ளது - சி.வி.சண்முகம்

அதிமுக பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து தலைமை ஆராய வேண்டும்.

அதிமுக தலைமை அக்கட்சியின் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

* இடைத்தேர்தலில் அதிமுக மோசமாக தோல்வி அடைந்துள்ளது.

* அதிமுக பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து தலைமை ஆராய வேண்டும்.

* அதிமுகவில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. பொதுக்குழுவை கூட்டினால் ஒத்துழைக்க தயார்.

* அதிமுக தலைமை அக்கட்சியின் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

* அதிமுகவின் சோதனை காலங்களில் உடன் இருந்துள்ளோம். அனைவரையும் அதிமுக தலைமை அரவணைக்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் மீது அதிருப்தியா? என்ற கேள்விக்கு கருத்து வேறுபாடு இருப்பது தெரிந்த விஷயம் தானே என அவர் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT