சென்னை:
பா.ம.க. மாம்பழ சின்னத்தையும், கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றையும், அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கிற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை உரிமையியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் மனுதாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றம் அந்த வழக்கை 3 நாட்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தர்ம பிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதற்கு டாக்டர் அன்புமணி தரப்பில் நாளை பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போது இருதரப்பு இறுதி கட்டத்தில் வாதமும் செய்ய வேண்டும். அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.