PMK| டாக்டர் ராமதாஸ் மாம்பழம் சின்னம் கேட்டு முறையீடு- கோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை உரிமையியல் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
PMK| டாக்டர் ராமதாஸ் மாம்பழம் சின்னம் கேட்டு முறையீடு- கோர்ட்டில் நாளை விசாரணை
Published on

சென்னை:

பா.ம.க.வின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அன்புமணி பயன்படுத்த தடை கேட்டு சென்னை உரிமையியல் கோர்ட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, பா.ம.க., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தன்னை வழக்கில் ஒரு மனு தாரராக சேர்த்து உரிமையியல் கோர்ட்டு விசாரிக்க மறுத்து விட்டது என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உரிமையியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில், ‘‘கட்சிக்குள் பிரச்சனை வரும்போது, சின்னத்தை முடக்கி வைப்பதுதான் நடைமுறை’’ என்று வாதிடப்பட்டது.

அன்புமணி தரப்பில், தேர்தல் கமிஷனிடம் இருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தங்களது தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாம்பழம் சின்னம் கேட்டு சென்னை உரிமையியல் கோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் முறையிட்டு மாம்பழம் சின்னத்தை கேட்கலாம்.

இதுகுறித்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை 3 நாட்களுக்குள் உரிமையியல் கோர்ட்டு விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்படி, சென்னை உரிமையியல் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விரைவாக விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தர்மபிரபு, அன்புமணி தரப்புக்கு இதுகுறித்து நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இப்போது தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com