இன்று நடந்த தவெக கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய நிதி அமைச்சர் மரியவில்சன், "50 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் செய்யாமல் மற்ற எல்லா விஷயத்தையும் திமுக செய்துள்ளது.
இப்போது ஒவ்வொரு ஊழலாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளி கல்வித்துறை ஊழல் எப்படி வெளியே வந்ததோ அதே மாதிரி மணல் குவாரி ஊழல் இப்போது வெளிவந்துள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவருகிறது.
குறைந்தது 28 மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. அவற்றில் வெறும் நான்கே குவாரிகளில் ரூ. 1427 கோடி ஊழல் நடந்தது கண்டுடிபிக்கப்பட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்பட்டால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த திமுக மட்டும்தான்.
ஏனெனில் அதிகளவில் மணல் வாரியதால் நிலத்தடி நீரே இப்போது இல்லை. எல்லாமே ஊழல். அந்த ஊழல் பணத்தை வைத்து என்ன செய்தார்கள் என தெரியவில்லை. அது குறித்தும் விரைவில் உண்மை வெளிவரும்.
என்னுடைய ஆர்.கே.நகர் தொகுதியாக இருக்கட்டும் மற்ற எந்த தொகுதியாக இருக்கட்டும் அவ்வளவிலும் ஊழல்.
இதேபோல நகராட்சி நீர்வாகத்துறை அமைச்சராக இருந்த நேரு செய்த ஊழல் கிட்டத்தட்ட 1020 கோடி ரூபாய். இதுபோல எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. விரைவில் எல்லாம் வெளிவரும்.
மக்களோட வரி பணம் எல்லாமே அவர்களின் கஜனாவுக்கு போயிடுச்சு. கிளீன் டிரான்ஸ்பரண்ட் கவர்மெண்ட் கொண்டு வருவேன் என்று சொன்னதை நிறைவேற்ற நமது சீப்மினிஸ்டர் 6 மாதமாக அயராது பணியாற்றி வருகிறார்.
புதிய சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும், அதேநேரம் பழைய ஊழல் லிஸ்ட் எடுக்க வேண்டும், புது வழிமுறைகளை கொண்டு வரணும் புது திட்டங்களை கொடுக்கணும் பிளஸ் வருவாயை பெருக்கணும்.
இதனால் நம்ம சீப்மினிஸ்டர் 5 நாட்கள் ரெகுலரா செக்ரட்டரியேட்க்கு வர்றது மட்டும் இல்லாம சாட்டர்டே ரெவியூ மீட்டிங் வேற வைக்கிறார். எனக்கு தெரிஞ்சு அவர் தூங்குறதே இல்ல.
நிதி பற்றாக்குறைய சரிபடுத்தணும், நிதி வருவாயை கிரியேட் பண்ணனும்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த ஆறு மாசத்துல இதை செஞ்சு முடிச்சிருக்கறாங்க" என்று
மேலும் தமிழ்நாடு தளபதி கோட்டை என்றும் திமுக இப்போது என்ன ஆட்டம் வேண்டுமானாலும் போடலாம், ஆனால் 2029 இல் அவர்களால் டெல்லிக்கே செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.