தமிழக செய்திகள்

தி.மு.க கூட்டணியில் தொடருங்கள்..!- திருமாவளவன், வீரபாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலன் அறிவறுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன், சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலன் அறிவறுத்தியதாக கூறப்படுகிறது.

விஜய் ஆதரவு கோரி வரும் நிலையில் கூட்டணி கட்சியினரிடம் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.