அரசு பேருந்து நடத்துநர்
தமிழக செய்திகள்

மகளிர் கட்டணமில்லா டிக்கெட்டை கிழித்த விவகாரம்: நடத்துநர் மீது பாய்ந்த நடவடிக்கை

சென்னை மாநகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்காக டிக்கெட் மட்டும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் மாநகர மற்றும் டவுண் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக சென்று வர மகளிர் விடியல் பயணம் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். ஆனால், பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு பிரத்யேகமாக ஒரு டிக்கெட் வழங்கப்படும். அதில் கட்டணம் குறிப்பிடப்பட்டிருக்காது. இந்த டிக்கெட்டின் எண்ணிக்கையை வைத்துதான் அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

பெரும்பாலான பேருந்துகளில் நடத்துநர்கள் மொத்தமாக டிக்கெட்டை எடுத்து கொடுப்பதாக (ஒவ்வொரு மகளிருக்கும் தனித்தனியாக டிக்கெட் வழங்காமல் மற்றும் ஒருவரிடம் கொடுத்து பேருந்தில் ஏர ஏர வழங்கச் சொல்வது) ஏற்கனவே பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் ஒரு நடத்துநர் அந்த டிக்கெட் கழித்து கீழே போடுவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த நடத்நர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.