சாக்ஷி சவுத்ரி- பிரியா கங்காஸ்
விளையாட்டு

காமன்வெல்த் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கம்

குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 பேர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 10 இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இதனால் 10 பதக்கங்கள் உறுதியானது.

இந்திய நேரப்படி இன்று மாலை இந்திய வீராங்கனைகள் பிரித்தீ பவார் மற்றும் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இந்த நிலையில் தற்போது சாக்ஷி சவுத்ரி 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இவர் இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை 5-0 என வீழ்த்தினார்.

பிரியா கங்காஸ்

60 கிலோ எடைப்பிரிவில் பிரியா கங்காஸ் கனடா வீராங்கனை மேரி-பத்தோலை 4-1 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். குத்துச் சண்டையில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஜூடோ

ஜூடோ போட்டியில் உன்னாதி சர்மா தென்ஆப்பிரிக்கா வீராங்கனை ஸ்கை நோஸ்டரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.